ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய சினிமாவுக்கு மலையாள சினிமாதான் கதாநாயகிகளின் உற்பத்திக்கூடம் என்பது தெரிந்த விஷயம் தான். இப்போதெல்லாம் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டால் போதும்.. அடுத்ததாக தமிழ் திரையுலகை தேடி வந்துவிடுகிறார்கள்.. இல்லை நம்மவர்கள் தேடிப்போய் அவர்களை அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்படி மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்த மஞ்சிமா மோகன் இங்கே சிம்பு-கௌதம் மேனன் காம்பினேஷனில் நடித்து டக்கென மற்ற நடிகர்களின் கவனம் ஈர்த்துவிட்டார்..
இப்போது கௌரவ் இயக்கும் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இப்போது அவரை தொடர்ந்து அனு இம்மானுவேல் என்கிற நடிகையும் தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். இவரும் நிவின்பாலி ஜோடியாக ஆக்சன் ஹீரோ பிஜூ என்கிற படத்தில் அறிமுகமானவர்தான். அதேபோல தமிழுக்கு வரும்போது உதயநிதியின் ஜோடியாகவே வர இருக்கிறார்.. ஆம்.. எழில் டைரக்சனில் உதயநிதி நடிக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.