ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான அஜய் தேவ்கன், தற்போது தனது கனவுப்படமான ‛சிவாய்' படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சன் ஆப் சர்தார்-2 படத்தில் நடிக்கிறார் அஜய். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜய் தேவ்கன் வெளியிட்டிருக்கிறார். இப்படம் 1897-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 21 சீக்கிய ராணுவ வீரர்கள் அடங்கிய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்கும், ஆப்கன் பழங்குடியினர் இடையே சரகரிஹியில் நடந்த போர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது. சர்வதேச தரத்தில் பிரமாண்டமாய் இப்படம் தயாராக இருக்கிறது.
இதுப்பற்றி அஜய் கூறியிருப்பதாவது... ‛‛தற்போது கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்க சிலரிடம் பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார்.