அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒரு படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சினிமாக்காரர்கள். சுல்தான் படத்தை அடுத்து சல்மான் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் - டியூப்லைட். இந்நிலையில், அறிமுக இயக்குனர் இந்த்ரா என்பவர் தானே இயக்கி, இசை அமைத்து, ஹீரோவாகவும் நடிக்கும் படத்துக்கு 'டியூப்லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக தியா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு, ரம்யா ஷங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'டியூப்லைட்' என்ற பெயரை சல்மான் கான் படத்துக்கு சூட்டப்பட்டநிலையில் உங்களுடைய படத்துக்கும் இந்த டைட்டிலை வைத்தது ஏன் என்று கேட்டால், “பாலிவுட்டில் சல்மான கான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு 'டியூப்லைட்' என்ற தலைப்பை வைத்திருக்கிறார்! அது ஒரு வகையில் எங்களுக்கு ஒரு விளம்பரம்தான்'' என்கிறார் கூலாக.
சராசரிக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண், தன்னைவிட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்கின்றனர். அவர்கள் இருவரின் வாழ்க்கையில் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர்! அது எங்கே போய் முடிகிறது என்பது தான் 'டியூப்லைட்' டின் ஒரு வரிக் கதையாம்.
16 வயதினிலே கதையை மறுபடி எடுக்கிற மாதிரி தெரியுதே.... பாரதிராஜா பணம் கேட்டு கேஸ் போடாம இருக்கணும்....!