Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தா, விக்ரமா ? காஜல் அகர்வால் திடீர் முடிவு

30 ஜூலை, 2016 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Ajith-or-Vikram-:-Kajal-Agarwals-sudden-decision

ஒன்றை விட மற்றொன்று சிறப்பாக இருக்கும் என நினைத்து சமயங்களில் தவறான முடிவுகளை சிலர் எடுப்பார்கள். ஆனால், அப்படி அவர்கள் சரி என நினைத்து எடுக்கும் முடிவு தவறாக அமைவதுண்டு. திரையுலகத்திற்கு இது ரொம்பவே பொருந்தும். இந்தச் செய்தி அஜித் படம் சம்பந்தப்பட்டது என்பதால் அதற்கு அஜித் படத்தையே உதாரணமாகச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'கஜினி' படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க வேண்டியது. 'மிரட்டல்' என்ற தலைப்பில் ஆரம்பமான படத்தில் நடிக்க வேண்டாமென அஜித் திடீரென முடிவெடுத்தார். அதன் பின்னர்தான் அது சூர்யா நடிக்க 'கஜினி'யாக மாறியது. அதன் பின் சூர்யாவிக்குக் கிடைத்த திருப்புமுனையை இந்த உலகம் அறியும்.


இப்போது அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு விக்ரமுடன் நடிக்கவிருந்த 'கருடா' படத்திலிருந்து காஜல் அகர்வால் கழண்டுவிட்டார் என்கிறார்கள். இந்தப் படம் குறித்த அறிவிப்பு எப்போதோ வெளியானது. இருந்தாலும் அஜித் படத்தில் நடிக்க யார் யாரையோ கேட்டு கடைசியில் காஜலிடம் வந்தார்கள். அவரும் அஜித் படம் என்றதும், 'கருடா'வும் வேண்டாம், விக்ரமும் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம்.


அடுத்த வாரத்தில் காஜல் அகர்வால் பல்கேரியா பறக்கவிருக்கிறார். அவர் பல்கேரியா பறக்கவிருப்பதால் 'கருடா' இப்போதைக்கு பறக்க வாய்ப்பில்லை. அடுத்த நாயகியைத் தேடிப் பிடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டும். காஜல் அகர்வால் செயலுக்கு சீக்கிரமே பஞ்சாயத்து கூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in