மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உப்புக்கருவாடு, அஞ்சல படங்களுக்குப்பிறகு விஜயசேதுபதியுடன் ‛இடம் பொருள் ஏவல்', தினேசுடன் ‛உள்குத்து', செல்வராகவனின் ‛நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்களில் நடித்துள்ளார் அட்டகத்தி நந்திதா. ஆனால் இந்த படங்களில் நடித்து முடித்து விட்ட நிலையில், தமிழில் அவருக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் தனது தாய்மொழியான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தீவிரமான முயற்சியில் இறங்கினார் நந்திதா. அப்படி முயற்சி எடுத்தவரை கன்னட சினிமாவில் யாருமே கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தெலுங்கில் நிகில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் எக்கடிக்கு பொத்தவு சின்னவட -என்ற படவாய்ப்பு கிடைத்தது. நிகில் சித்தார்த் வளர்ந்து வரும் ஹீரோ என்றாலும், அந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம். அதனால் உடனே கமிட்டான நந்திதா, தமிழில் உப்புக்கருவாடு படத்தில் மட்டுமே ஒருகாட்சியில் மாடர்ன் கெட்டப்பில் கிளாமராக நடித்த நிலையில், இந்த தெலுங்கு படத்தில் இதுவரை நடித்திராத அளவுக்கு மாடர்ன் கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறாராம். அதனால் அவர் நடித்து வரும் படம் சுமாரான வெற்றி பெற்றாலும் ஆந்திராவில் நந்திதாவுக்கு மவுசு கூடிவிடும் என்கிறார்கள்.