அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ரன், ஒக்க அம்மாயி தபா போன்ற படங்களுக்கு சுதீப் கிஷான் நடிக்கும் மாயவன் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ளது. திருக்குமரன் என்டர்டையின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தை சிவி குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஹன்சிகா இன்று(ஜூலை 29) வெளியிட்டுள்ளார். சுதீப் கிஷானுக்கு ஜோடியாக நடிகை லாவன்யா திரிபதி நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷாஃப்ரான் வில்லனாக நடிக்கின்றார். இப்படத்தின் கதபாத்திரங்களுடன், பின்னணியில் மாஸ்க் அணிந்திருக்கும் மர்ம மனிதன் தோன்றுவதாக பஸ்ட் லுக் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுதீப் கிஷான் இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கின்றார். மாயவன் படத்தின் டீசர் ஆகஸ்ட் 2ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.