ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஸ் படம் தள்ளி போவதால், பட தயாரிப்பாளர்கள் மீது பாகிஸ்தான் நடிகையான மகிரா கான் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ள மகிரா, ஷாருக்கானுடன் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறினார். அப்போது அவர், எனது கனவு நினைவாகி உள்ளது. அவருடன் நடிப்பது உற்சாகமாகவும், அதே சமயம் படபடப்பாகவும் இருந்தது. அவருக்கு முன் என் நடிப்பை காட்டுவது மிகுந்த நெருக்கடியானதாக உணர்ந்தேன். அதனால் கவலையாக இருந்தது. இப்படத்தில் ஷாருக்கான் உடன் நான் நடித்த முதல் சீன், மிக அற்புதமாக இருந்தது. என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. எனது வசனங்களை நன்றாக நான் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் என் வந்ததும், அந்த ஒரு நிமிடம் எனது வசனங்களை எல்லாம் மறந்து விட்டேன். அது எப்போதும் என் நினைவில் இருக்கும் என்றார். ராகுல் தொலாகியா இயக்கி உள்ள ராஸ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி ரிலீசாக உள்ளது.