‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சமீபகாலமாக படத்துக்குப்படம் தனது காஸ்டியூம் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலிலும் வித்தியாசம் காட்டி வருகிறார் விஜய். அந்த வகையில், தனது படங்களுக்கு மட்டுமின்றி, தான் விழாக்களுக்கு செல்லும்போதுகூட எந்த மாதிரியான காஸ்டி யூம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கு ஒரு தனி காஸ்டி யும் டிசைனர் வைத்திருக்கிறார். அதேபோல் ஹேர்ஸ்டைல் விசயத்தில் துப்பாக்கி, புலி, தெறி என ஒவ்வொரு படங்களிலுமே புதுமையான கெட்டப்பில் தோன்றி வருகிறார்.
அந்த வகையில், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் இரண்டு வேடம் என்பதால் இரண்டிற்குமிடையே வித்தியாசம் காட்ட காஸ்டியூம், ஹேர்ஸ்டைலில் தனி கவனம் செலுத்தி வருகிறார் விஜய். அதோடு, தனது ஹேர்ஸ்டைலில் இன்னும் புதுமை செய்ய வேண்டும் என்று வெளிநாடு சென்று ஆரோக்கியமான, அடர்த்தியான முடி வளர ஒரு சிகிச்சை எடுத்துள்ளாராம் விஜய். அதன்காரணமாக, அந்த சிகிச்சை செய்யும்போது தலைமுடி வெயிலில் படக்கூடாது என்பதற்காக தற்போது விக் அணிந்தே வெளியில் தலைகாட்டுகிறார் விஜய்.