அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வெப்பம், நான் ஈ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் நானி, டோலிவுட்டில் பலே பலே மகாதேவோ, கிருஷ்ண காடி வீர பிரேம கதா, ஜென்டில்மேன் என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் தனது சம்பளத்தை ரூ 3 கோடியிலிருந்து ரூ 5 கோடிக்கு உயர்த்தியுள்ளாராம். ரூ 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஜென்டில்மேன் திரைப்படம் ரூ 20 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டியது. அதே போல் ஜென்டில்மேன் படத்திற்கு முன்னால் நானி நடித்த படங்களும் வசூலில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வசூலை பெற்று தந்தது.
இதனால் இனி நடிக்கவிருக்கும் படங்களுக்கு நானி ரூ 5 கோடி சம்பளம் வாங்க நானி தீர்மானித்துள்ளாராம். இயக்குனர் விரிஞ்சி வர்மா இயக்கத்தில் மஜ்னு எனும் காதல் கதையம்சம் கொண்ட படத்தில் நானி தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடிக்கின்றார். ஆனந்தி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெமினி கிரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.