விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தெலுங்கு திரைஉலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த சுனில் தற்போது நாயகனாக நடித்து வருகின்றார். அண்மையில் சுனில் நடிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றி பெறவில்லை இருப்பினும் நாயகனாகவே நடித்து வரும் சுனில் தற்போது ஜக்கன்னா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சுனில் இப்படத்தின் புரமோஷனில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும் தயாரிப்பாளருக்கும் சுனிலுக்கு இடையே சுமூக உறவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் தகவல் பரவியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சுனிலிடம் கேட்டதற்கு சற்று கோபமாகவே சுனில் பதில் கூறியுள்ளார். இத்தகவல் முழுவதும் உண்மைக்கு புறம்பானவை என கூறியுள்ள சுனில் தன்னை பிடிக்காதவர்கள் கிளப்பிவிடும் வதந்தியே இவை அணைத்தும், அவர்களுக்கு தான் பதில் கூற தேவையில்லை ஜக்கன்னா படத்தின் வெற்றி அவர்களுக்கு பதில் சொல்லும் என்றும் சுனில் கூறியுள்ளார்.