டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் அமெரிக்காவிற்கு சென்ற படக் குழுவினர் ஜுன் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஒரு ஷெட்யூல் முடிந்து சென்னை வந்தனர். அந்த இடைவெளியில் கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு தற்போது வரை மருத்துவமனையில் இருக்கிறார். அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாலும் சில வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைதான் இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, படத்தின் படத்தொகுப்பாளர் ஜேம்ஸ் ஜோசப் மனைவி விபத்து ஒன்றில் சிக்கியதால் ஜேம்ஸ், இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணாவிற்கும் கமலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயகிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மாற்றாக வேறு கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதற்குள் கமல்ஹாசனும் அடிபட்டு மருத்துவமனையில் சேரவேண்டிய நிலையாகி விட்டது. எனவே கமல்ஹாசன் முழுமையாக குணம் அடைந்த பிறகே அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.
இந்தப் படத்தை முதலில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது படப்பிடிப்பு முடியவே டிசம்பர் வரை இழுக்கும் என்பதால் படத்தின் வெளியீடு 2017ல் தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.