தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலி என்றாலே சாதனை என்றாகிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்தது 'கபாலி'. டீஸரில் தொடங்கி... வியாபாரம்... ரிலீஸ்... வசூல்....என ஒவ்வொரு விஷயத்திலும் கபாலி சாதனை படைத்துக்கொண்டே இருந்தது. கபாலியின் சாதனை முடியவில்லை. தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கபாலி படம் வெளிவந்த பிறகும் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. உலகளவில் முதல் 3 மூன்று நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக 'கபாலி' திரைப்படம் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இப்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.
இந்திய அளவில் 3 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் டீஸர் என்ற சாதனையை 'கபாலி' டீஸர் படைத்திருக்கிறது. கடந்த மே 1ஆம் தேதி வெளியான கபாலி டீஸர், 3 மாதத்திற்குள்ளாகவே இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. இன்னும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கபாலி டீஸரை பார்த்து வருகின்றனர்.