தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷுக்கு இன்று பிறந்த நாள்! 2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் திரையுல்கில நடிகராக அறிமுகமானவர் தனுஷ்! அந்தப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனாக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட தனுஷ், பின்னர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். புதிய முயற்சிகளில் அவர் மிகப்பெரிய வெற்றிகளையும் குவித்தார்.
தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்ற தனுஷ், அடுத்த கட்டமாக 'ராஞ்சனா', 'ஷமிதாப்' ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.
பொதுவாக தென்னிந்திய நடிகர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாது பாலிவுட் திரையுலகம். ஆனால் தனுஷுக்கு மட்டும் அங்கே மாபெரும் வரவேற்பு கிடைத்தது!
தமிழ், ஹிந்தி மொழி படங்களில் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்துள்ள தனுஷுக்கு இப்போது ஒரு ஆங்கில படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தமிழில் 'தொடரி', 'கொடி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 50 கோடி பட்ஜெட்டில் 3 பாகங்களாக உருவாக உள்ளது.
கடந்த சில நாட்களாக வட சென்னை படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள தனுஷ் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, தன்னுடைய ரசிகர்களையும் சந்திக்கிறார். சென்னை, சாலிகிராமம் பகுதியில் உள்ள தனுஷின் ரசிகர்கள் அவருக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர்.