ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிக்கு அடுத்ததாக சுட்டிக்குழந்தை முதல் வயசான பெரிசுகள் வரை ரசிகர்களாக இருப்பது நடிகர் விஜய்க்குத்தான். அப்படியானால் விஜய்க்கு இருக்கும் ரசிகைகளை பற்றி கேட்கவும் வேண்டுமா என்ன..? அப்படி பத்தாம் வகுப்பு படித்த சிறுமி ஒருவர் தீவிரமான விஜய் ரசிகை.. விஜய்யை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்பது அவரது பல வருட ஆசை.. இத்தனைக்கும் இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகாதாசின் குடும்ப நண்பரின் பெண் தான்.. பிறகென்ன.. விஜய்யை சந்திப்பது எளிதாக இருந்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்..?
அதுதான் இல்லை.. விஜய்யை சந்திக்க அழைத்து செல்லவேண்டுமென்றால் பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி தனது பப்ளிக் தேர்வில் ஸ்டேட் ரேங்க் எடுக்கவேண்டும் எனவும் எடுத்தால் மட்டுமே விஜய்யை சந்திக்க வைப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் நிபந்தனை விதித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யை சந்திக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் ஸ்டேட் ரேங்க் வாங்கி காட்டினார் அந்த சிறுமி.. முருகதாஸும் சொன்னபடியே அந்த சிறுமியை அவரது குடும்பத்துடன் சேர்ந்து விஜய்யை சந்திக்க வைத்துள்ளார். விஜய்யை சந்திப்பதற்காக நிபந்தனை விதித்து சிறுமியை படிப்பில் ஊக்கப்படுத்திய முருகதாஸை பாராட்டியே ஆகவேண்டும்.