ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுதந்திர தின விடுமுறையை அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் குறி வைப்பது ஆயுதபூஜை விடுமுறை நாட்களைத்தான். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என வரிசையாக 5 நாட்கள் விடுமுறை. எனவே, அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸைக் குறிவைத்து இரண்டு மாதத்திற்கு முன்பே ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர்.
'ரெமோ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளே இன்னும் முடியவில்லை. இதற்கிடையில், அதே நாளில் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், டீகே இயக்க, ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் 'கவலை வேண்டாம்' படமும் அக்டோபர் 7-ஐ தங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளது.
இப்போது லேட்டஸ்ட்டாக இந்தப் பட்டியலில் ஜெயரம் ரவியும் இணைந்திருக்கிறார். 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில், ஜெயரம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் போகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. போகன்' படத்தில் அர்விந்த் சாமியும் இணைந்திருக்கிறார்.
'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு இப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார். ரெமோ படத்தைப் போலவே இந்தப் படமும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு துண்டைப்போட்டுள்ளது.