ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீரம், வேதாளம் படங்களை அடுத்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் 'AK 57' படத்திற்காக இணைந்துள்ளது. இவர்கள் இணைந்த இரண்டு படங்களும் வெற்றிகளைச் சுவைத்ததால் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு போனது. அவர் மறுத்துவிட்டதால் தற்போது காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அஜித்தின் தங்கை வேடத்தில் நடிப்பதற்காக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தங்கை வேடம் என்பதால் அக்ஷரா தயக்கம் காட்டுவதாக தகவல் அடிபடுகிறது. 'AK 57' படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக உள்ள மலேஷியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளை தவிர்த்துவிட்டு தமிழர்கள் அதிகம் இல்லாத நாடுகளில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளும்படி இயக்குநர் சிவாவிடம் அஜித் கேட்டுக்கொண்டாராம். அதன்படி 'AK 57' படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு பல்கேரியாவில் இந்த வாரம் துவங்க உள்ளது. பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.