Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' மாதிரியே ‛ஏஏஏ'

28 ஜூலை, 2016 - 14:56 IST
எழுத்தின் அளவு:
AAA-also-like-Trisha-Illaena-Nayanthara

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற செக்ஸ் ஓரியண்டட் படத்தைத் இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. படத்தின் தலைப்பு இப்படி இருந்தாலும் ஏஏஏ என்பதையே இப்படத்தின் தலைப்பாக முன்னிறுத்தி வருகின்றனர். ஏ என்றாலே வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதைக் குறிக்கும் எழுத்து. ஆபாசத்துக்கும் ஏ என்ற எழுத்து ஒரு குறியீடாக இருக்கிறது. ஏ என்பதன் அர்த்தம் இப்படி இருக்க, த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஏடாகூடமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய படத்துக்கு ஏஏஏ என்ற தலைப்பு வைத்திருக்கிறார்.


அந்தப் படத்தின் ஹீரோ... சிம்பு. ஏற்கனவே பீப் பாடல் உருவாக்கியவர் இவர். இவர்கள் இருவரும் இணைந்துள்ள ஏஏஏ படம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதற்கான விடை தற்போது தெரிய வந்துள்ளது. இப்படத்தின் முதல் ஷெட்யூல் திண்டுக்கல்லில் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. கதாநாயகியாக நடிக்கும் ஸ்ரேயா சரண் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஆபாசம் தொனிக்கிற வசனங்களுடன் கூடிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in