நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் 20 ஆண்டுகளாக சினிமாவில் நீடித்து வருபவர் அர்ஷத் வர்சி. தற்போது அர்ஷத் வர்சி " தி லெஜெண்ட் ஆப் மைக்கேல் மிஸ்ரா " படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அர்ஷத் வர்சியிடம் கோல்மால் அகைன் படம் பற்றி கேட்ட போது.
அர்ஷத் வர்சி கூறியதாவது..." கோல்மால் அகைன் படம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஏனென்றால் எங்கள் முழு படக்குழுவும் ஒரு பைத்தியம் போல் நடிப்பதில் வல்லவர்கள். அஜய் தேவ்கன், துஷார் கபூர் ஆகியேர் முக்கிய வேடத்தில் நடிப்பதால் இப்படம் மிக பெரிய பெயரை பெற்று தரும். இப்படமும் முன்பு வெளியான படம் போல் இருக்குமா? என்று தெரியவில்லை. முந்தைய படங்களுக்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இப்படத்தில் கரீனா கபூர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் " என்றார்.
கோல்மால் அகைன் படத்தை இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.