'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கபூர் குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ரன்பீர் கபூர். பிறப்பிலேயே சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சினிமா இவருக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக ரன்பீர் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரன்பீர் விரைவில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ரன்பீரின் தாத்தாவும், பாலிவுட்டின் மாஜி ஹீரோவுமான ராஜ்கபூர் வேடத்தில் ரன்பீர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ராஜ்கபூரின் மகன்களான ரிஷிகபூரும், ரன்தீர் கபூரும் இணைந்து தங்களின் அப்பா ராஜ்கபூரின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ராஜ்கபூராக ரன்பீரை நடிக்க வைக்க இவர்கள் இருவர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பமும் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு ரன்பீரும் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
தற்போது ராஜ்கபூரின் வாழ்க்கை வரலாற்று படம் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளதாம். அதனால் படப்பிடிப்பு துவங்க நாளாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஆர்கே பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.