Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தனக்கென தனிப் பாதையை உருவாக்கிய ‛தங்கமகன்' தனுஷ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

28 ஜூலை, 2016 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Dhanush-Birthday-Special

'துள்ளுவதோ இளமை' படம் வெளியான போது அந்தப் படத்தில் நடித்த நான்கைந்து கதாநாயகர்களில் கொஞ்சம் தனியாகத் தெரிந்தவர் தனுஷ். அவருடைய அப்பா கஸ்தூரிராஜா இயக்கிய படம் அது என்பதால் இயக்குனரின் மகன் அவர் என அறியப்பட்டார்.


அடுத்து தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படத்தை அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்க அந்தப் படம் யுவனின் இனிமையான பாடல்களாலும் தாறுமாறான வெற்றியைப் பெற்றது. அந்தக் கதாபாத்திரத்தில் தனுஷும் நன்றாக நடித்துள்ளாரே என்ற பாராட்டுக்களும் வந்தது. அடுத்து வந்த 'திருடா திருடி' படம் தனுஷை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வளர்த்தது. அதன் பின் சில சரியான கதைகளைத் தேர்வு செய்யாததால் அவருக்கு தடுமாற்றம் வந்தது.


'புதுப்பேட்டை' படம் விமர்சன ரீதியாகப் பேசப்பட்டாலும் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது. 'திருவிளையாடல் ஆரம்பம்' படம் மீண்டும் தனுஷுக்கு ஒரு புதிய இன்னிங்சைத் துவக்கியது. அவர் இயக்குனர்களின் நடிகன், எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் அவரைத் தக்க வைத்துக் கொள்வார் என்பதை வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படம் நிரூபித்தது.


வெற்றிமாறன் தனுஷின் திரையுலக வாழ்க்கையை நிறையவே தடம் மாற்றி அமைத்தார். அடுத்து 'யாரடி நீ மோகனி' படம், தனுஷின் இயல்பான நடிப்பில் நம்ம வீட்டுப் பையன் என்பதை அதிகமாக உணர்த்தி இன்று வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது.


'குட்டி, படிக்காதவன், உத்தமபுத்திரன்' ஆகிய படங்கள் தனுஷை மீண்டும் கமர்ஷியல் சினிமாவுக்கே அழைத்துச் சென்றன. 'ஆடுகளம்' படம் மூலம் வெற்றிமாறன் திரும்பவும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்து, தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தார். தனுஷ் வழக்கமான மசாலாப் பட நடிகர் அல்ல என்பதை தமிழ் சினிமா உலகம் கொஞ்சம் தாமதமாகவே புரிந்து கொண்டது. இருப்பினும் ஏனோ, தனுஷ் திரும்பவும் 'மாப்பிள்ளை, வேங்கை' என மிகச் சுமாரான படங்களில் நடித்தார்.


கொஞ்சம் தடம் மாறிய தனுஷை அண்ணன் செல்வராகவன் மீண்டும் 'மயக்கம் என்ன' படம் மூலம் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் '3' படம் மூலம் தனுஷை உலகப் புகழ் பெற வைத்தார். 'ஒய் திஸ் கொலவெறி' என தனுஷ் எழுதி சொந்தக் குரலில் பாடிய பாடலை உலகமே ரசித்தது. ஹிந்தித் திரையுலகமும் தனுஷைக் கவனிக்க ஆரம்பித்தது. அதன் பலனாக 'ராஞ்சனா' ஹிந்திப் படம் மூலம் அங்கு அறிமுகமாகி முதல் ஹிந்தி அறிமுகத்திலேயே 100 கோடி கிளப்பில் சேர்ந்தார் தனுஷ்.


'வேலையில்லா பட்டதாரி' மீண்டும் தனுஷை அழுத்தமாகப் பதிவு செய்தது. மீண்டும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பு, உலகமே வியந்து பார்க்கும் அமிதாப்புடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு. எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் சமீப காலத்தில் கிடைக்காத ஒரு வாய்ப்பு.


'அனேகன்' படம் பல்வேறு அடையாளங்களைக் காட்டியது, 'மாரி' குழந்தைகளும் ரசித்த படமாக மாறியது, 'தங்கமகன்' கொஞ்சம் தடுமாற வைத்தாலும் அடுத்து தன்னுடைய 'கொடி'யை பறக்க விட ஆயத்தமாக இருக்கிறார்.


கௌதம் மேனன் 'எனை நோக்கி பாயும் தோட்டா'விலும், வெற்றிமாறன் மீண்டும் 'வட சென்னை' படத்திலும் அவரை மாறி மாறி காட்ட இருக்கிறார்கள்.


நடிகர் என்பதையும் மீறி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை வளர்த்துக் கொண்ட கலைஞராக இன்று வேறு மாதிரி வளர்ந்து நிற்கிறார் தனுஷ். 'துள்ளுவதோ இளமை' காலத்திலிருந்து தனுஷைப் பார்த்து வருபவர்களுக்கு அவருடைய வளர்ச்சி பொறாமைப்பட வைக்க வாய்ப்பேயில்லை.


திரையுலகில் எத்தனையோ வாரிசுகள் இருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கென சொந்தத் திறமையிருப்பவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். அந்தத் திறமையால் தானும் வளர்ந்து மற்ற திறமைசாலிகளையும் அடையாளம் கண்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அதற்கு மிகப் பெரும் உதாரணம் சிவகார்த்திகேயன்.


நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக 'காக்கா முட்டை, அம்மா கணக்கு' என மாற்று சினிமாவிற்கும் ஆதரவு கொடுக்கும் தயாரிப்பாளராகவும் வியந்து நிற்கிறார் தனுஷ்.


திரையுலகத்தில் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படும், அடுத்தவர்களை வளர்த்துவிடத் தயங்கும் மனிதர்கள்தான் அதிகம் என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இருந்தாலும் சிலர் பறவைகளைக் காக்கும் கூடுகளாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கூட்டில் தனுஷ் முக்கியமானவர்.


நடிகர் தனுஷூக்கு இன்று(ஜூலை 28-ம் தேதி) பிறந்தநாள். தனது திறமையாலும், ரசிகர்களின் வாழ்த்துக்களுடனும் தனுஷ், தொடர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்...! வாசகர்களாகிய நீங்களும் தனுஷூக்கு இங்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in