ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் 'அச்சமுண்டு அச்சமுண்டு', மலையாளத்தில் 'பெருச்சாழி' படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது இயக்கி வரும் படம் 'நிபுணன்'. இது ஒரு துப்பறியும் படம். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கான விடை தேடி உலகம் முழுக்க பயணிக்கிற கதை. இதில் அர்ஜுன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் துப்புறியும் நிபுணராக நடிக்கிறார். அவரது உதவியாளர்களாக பிரசன்னாவும், வரலட்சுமியும் நடிக்கிறார்கள். அர்ஜூன் மனைவியாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் நடிக்கிறார். இவர்கள் தவிர வைபவ், சுமன், சுஹாசினி, நடிக்கிறார்கள்.
தமிழ் மற்றம் கன்னட மொழிகளில் தயாராகிறது. கன்னடத்தில் 'விஸ்மயா' என்ற டைட்டில். பேஷன் பிலிம் பேக்டரி சார்பில் உமன், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோருடன் அருண் வைத்தியநாதனும் இணைந்து தயாரிக்கிறார். சென்னை மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. கன்னடம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.