'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பிச்சைக்காரன் படத்திற்கு ஹிட்டுக்கு பிறக விஜய் ஆண்டனியின் சினிமா பயணம் பரபரப்படைந்திருக்கிறது. அதோடு, தற்போது அவர் நடித்து வரும் சைத்தான் படம் வரை இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களையும் தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் மூலமே அவர் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதனால், முதன்முறையாக மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
இப்படத்தை அவர் நடித்த முதல் படமான நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி வருகிறார். அந்த வகையில் இந்த படமும் சீரியசான கதையில்தான் தயாராகிறது. குறிப்பாக, அரசியல் கலந்த கதையில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் எந்தமாதிரியான அரசியல்வாதிகளுக்கெல்லாம் எமனாகிறார் என்பதுதான் இந்த படமாம். மேலும். இந்த படம் மெகா பட்ஜெட் என்பதால் சமீபத்தில் ரஷ்யா சென்று இரண்டு வாரங்களாக முகாமிட்டு இரண்டு பாடல் மற்றும் பல காட்சிகளை படமாக்கி விட்டு வந்துள்ளனர். இதையடுத்து ஒரு பிரமாண்ட செட் அமைத்தும் ஒரு பாடல் படமாகிறதாம். ஆக, இன்னும் எமன் படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்களில் முடிந்துவிடும என்கிறார்கள்.