ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஷோலோ ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படி நயன்தாரா நடித்த பல படங்கள் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அந்த வகையில், ஜூலை 29-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை அவர் நடித்த 4 படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.
அந்த வகையில், தெலுங்கில் ரவிதேஜாவுடன் நயன்தாரா இணைந்து நடித் துள்ள துபாய் ராணி, அதிரடி அர்ஜூன் ஆகிய இரண்டு படங்களும் டப் செய்யப்பட்டு ஜூலை 29-ந்தேதி தமிழில் வெளியாகிறது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி ஜீவாவுடன் அவர் நடித்த திருநாள் திரைக்கு வருகிறது. அதன்பிறகு ஆகஸ்ட் 12-ந்தேதி வெங்கடேசுடன் இணைந்து நயன்தாரா நடிததுள்ள பாபு பங்காராம் தெலுங்கு படம் ரிலீசாகிறது. தமிழில் இப்படம் செல்வி என்ற பெயரில் நயன்தாராவை முன்னிறுத்தி வெளியாக உள்ளது.