இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் பாபு பங்காரம் படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பிலிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவு செய்யப்பட்டு, திரைக்கு தயாராகிவிட்டது. வெங்கடேஷ் சிரிப்பு போலீஸாக நடித்திருக்கும் இப்படத்தில், நயன்தாரா நடுத்தர வசதி கொண்ட பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளிவந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் பாபு பங்காராம் ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் பாபு பங்காராம் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு ஏற்பாடு செய்து வருகின்றது. தமிழில் பாபு பங்காராம் படத்திற்கு ‛செல்வி' என பெயரிட்டுள்ளனர். நயன்தாரா தமிழில் முன்னணி நாயகி என்பதால் படக்குழு பாபு பங்காராம் படத்தை தமிழில் வெளியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.