ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதமிபுத்ர சாதர்கனி எனும் தனது 100வது படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, கட்டுடலுடன் இளமையாக தோன்ற மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றாராம். பாலகிருஷ்ணாவின் சமீபத்திய படங்களில் அவரது தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவது பலவீனமாக கூறப்பட்டது. இதனால் தற்போது பாலகிருஷ்ணா தனது தோற்றத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
கஞ்சே எனும் தேசிய விருது வென்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் தற்போது பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை இயக்குகின்றார். சரித்திர திரைப்படம் என்பதால் பாலகிருஷ்ணா, கட்டுடலுடன் தோன்ற வேண்டும் என இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்று சிகிச்சைகள் மேற்கொள்ள பாலகிருஷ்ணா சம்மதம் கூறினாராம். ஜார்ஜியாவில் கௌதமிபுத்ர சாதர்கனி படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றது வந்தது.
இயக்குனர் க்ரிஷின் திருமணம் ஆகஸ்ட் 8ல் நடக்கவிருப்பதால் படப்பிடிப்பிற்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளதாம். க்ரிஷின் ஹனிமூன் முடிந்த பின்னர் மீண்டும் கௌதமிபுத்ர சாதர்கனி படத்தின் படப்பிடிப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரேயா பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடிக்கும் இப்படத்தை பொங்கல் பண்டிகையை ஒட்டி 2017 ஜனவரி 12ல் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.