மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அரசியலிருந்து தற்சமயம் ஓய்வு எடுத்துள்ள டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நாயகனாக கத்திலான்டோடு படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.
அகில், அல்லுடு ஸ்ரீனு, போன்ற படங்களில் தோல்வியைத் தழுவிய விவி விநாயக் கத்திலான்டோடு படத்தை இயக்குவதற்கு விவி விநாயக் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் சம்பளத்திற்கு பதில் கிழக்கு கோதாவரியில் கத்திலான்டோடு படத்தின் விநியோக உரிமையை விவி விநாயக் ராம் சரணிடம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பு நிறுவனத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.