இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'கபாலி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை படத்தைப் பற்றி அதிகமாகப் பாராட்டியவர்கள் கூட படம் பார்த்த பின் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. படம் சாதி பற்றி பேசுகிறது, படத்தில் ரஜினிகாந்த் வயதானவராக நடித்தது பிடிக்கவில்லை, நமது நாட்டில் கதை நடக்கவில்லை, படத்தில் ரஜினிக்கு டூயட் இல்லை, காமெடி காட்சிகள் இல்லை என ஒவ்வொரும் பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள். இப்படிப் பேசியவர்கள்தான் 'லிங்கா' படம் வந்த போது ரஜினிகாந்த் இன்னும் ஏன் இளமை தோற்றத்தில் நடிக்க வேண்டும், இளம் நாயகிகளுடன் ஆடிப் பாட வேண்டும் என்றார்கள். அப்போதைக்கு ஒரு பேச்சையும் இப்போதைக்கு ஒரு பேச்சையும் மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் 'கபாலி' பட வெளியீட்டிற்கு முன்னதாக அமெரிக்காவில் சுமார் இரண்டு மாத காலம் ஓய்வில் இருந்தார். அப்போது அவருடைய உடல்நிலையைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் பரவின. அமெரிக்காவிலிருந்து வெளியான ரஜினிகாந்தின் புகைப்படங்களைப் பார்த்தும் சிலர் கமெண்ட் செய்தனர். தன்னுடைய நீண்ட கால நண்பரான சோ-விற்கு 'கபாலி' படத்தினை நேற்று சென்னையில் திரையிட்டார் ரஜினிகாந்த். அப்போது அவரை நேரில் பார்த்தவர்கள் அவருடைய தோற்றத்தையும், வேகத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு வரை '2.0' படத்தில் பழைய பொலிவுடன் ரஜினிகாந்தால் நடிக்க முடியுமா என்று கேட்டவர்கள் கூட இப்போது வாயடைத்துப் போய்விட்டார்கள். அடுத்த வாரம் முதல் ரஜினிகாந்த் '2.0' படத்தில் நடிக்கப் போகிறார் என்று படக்குழுவிலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் அடுத்த அதிரடி '2.0'வில் 'கபாலி'யை விடவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.