'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கோல்மால் படங்களின் வரிசையில் விரைவில் நான்காம் பாகமாக கோல்மால் அகைன் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன் முதன்மை ரோலில் நடிக்க உள்ளார். ‛கோல்மால் அகைன் படத்திலும் கரீனா நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கரீனா கர்ப்பமாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
இதனிடையே கரீனாவிற்கு பதிலாக ஆலியாபட் அந்த ரோலில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோல்மால் அகைன் படத்தில் நடிப்பதை பற்றி ஆலியாவிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஆலியா ...." கோல்மால் அகைன் படம் பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. ரோகித் படத்தில் நடிக்க நான் ஆசைப்படுகிறேன். இப்படத்தில் நடிக்க எனக்கு தற்போது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை, கிடைத்தால் நடிப்பேன்." என்றார்.