Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபால்-விஜய் விவாகரத்து : விஜய்யின் தந்தை உறுதி செய்தார்

27 ஜூலை, 2016 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Amalapaul---Vijay-split-:-Vijays-father-confirmed

வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்தை சேர்ந்த அமலாபால். விக்ரம் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கிய படம் ‛தெய்வத்திருமகள். அந்த படத்தில் அனுஷ்கா, அமலாபால் இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். அந்த படத்தை இயக்கி வந்த நேரத்தில் டைரக்டர் விஜய், அமலாபாலுக்கிடையே காதல் உருவானது. அதையடுத்து விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலாபால் நாயகியாக நடித்தார். பெற்றோர் சம்மதத்துடன் ஏ.எல்.விஜய்-அமலாபால் ஆகிய இருவரும் 2014-ல் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிக்க வேண்டாம் என்று விஜய் குடும்பத்தில் கூறுகின்றனர். ஆனபோதும், படங்களில் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார் அமலாபால். சமீபத்தில் அம்மா கணக்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து தனுஷூடன் வட சென்னை படத்தில் நடிக்கிறார். இது இயக்குநர் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், டைரக்டர் ஏ.எல்.விஜய்-அமலாபாலுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களாக மீடியாக்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த செய்தி சம்பந்தமாக டைரக்டர் விஜய், அமலாபால் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பு செய்தியும் வெளியிடவில்லை, அதேசமயம் உண்மையா என்று விளக்கவில்லை. அதனால் இதுவும் ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்று கருதப்பட்டது.


இந்நிலையில் விஜய் - அமலாபால் இருவரும் விவகாரத்து செய்ய இருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த தகவலை இயக்குநர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.


இதன்மூலம் இயக்குநர் விஜய் - அமலாபால் இடையேயான திருமண உறவு இரண்டு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in