இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கபாலி தோல்வி, என எவ்வளவு தான் காக்கையாக சிலர் கத்தினாலும், இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் படமாக கபாலி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். முதல்நாளிலேயே கபாலி படத்தின் மொத்த பட்ஜெட் தொகையும் வசூலாகிவிட்டது. தற்போது அதையும் தாண்டி வசூல் சாதனையை புரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‛கபாலி' படம் ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் அந்தளவுக்கு திருப்தியடையவில்லை. எனவே இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்யலாம் என்று அங்குள்ள தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிலர் கருதுகின்றனர். அதிலும் இப்படத்தில் கபாலி ரஜினி வேடத்தில், பாலிவுட்டின் ‛பிக் பி' என போற்றப்படும் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் ‛கபாலி' ஹிந்தி ரீ-மேக் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.