‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பலமுகம் கொண்ட சோ ராமசாமிக்கு, நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தை திரையிட்டு காண்பித்தார். தாணுவின் தயாரிப்பில், ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான பிரமாண்ட படம் கபாலி. இப்படத்திற்கு என்னதான் இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையுமில்லை. படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்தாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது வரை சுமார் ரூ.300க்கு மேல் வசூலாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி, இருதினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். நேற்று கபாலி படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தச்சூழலில் ஏற்கனவே கபாலி படத்தின் சிறப்பு காட்சியை அமெரிக்காவில் ரசித்த ரஜினி, நேற்று தனது நண்பரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு தான் நடித்த கபாலி படத்தை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார். ரஜினி, சோ ராமசாமி, தாணு, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட வெகு சிலர் மட்டும் இந்தக்காட்சியில் பங்கேற்றனர்.
படம் பார்த்துவிட்டு சோ ராமசாமி, படம் நல்லாயிருக்கு, நல்லா எடுத்திருக்கீங்க என்று தாணு உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு ரஜினியை வேறு கோணத்தில் பார்த்தாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் சோ.