தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில வருடங்களுக்கு முன்புவரை பிசியான இசையமைப்பாளராக இருந்தார் யுவன்சங்கர்ராஜா. அவரிடமிருந்து ட்யூன் வாங்குவதற்காக முன்னணி இயக்குநர்கள் பலர் பல மாதங்கள் காத்திருந்த நிலையும் அப்போது இருந்தது. அவரது காம்பினேஷனில் வெற்றிப்படங்களைக் கொடுத்த அமீர், விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு போன்ற இயக்குநர்கள் வெற்றிப்பட இயக்குநர்களாகவும் விளங்கினார்கள்.
யார் கண்பட்டதோ, யுவன் சங்கர்ராஜாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத், இமான், சந்தோஷ்நாராயணன், ஜஸ்டின் பிரபாகரன் போன்ற இளம் இசையமைப்பாளர்கள் பிசியானார்கள். இன்னொரு பக்கம், யுவனுக்கு வெற்றிப்பட காம்போவாக இருந்த இயக்குநர்களும் மார்க்கெட் இழந்தனர். இதன் காரணமாக யுவனுக்கும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மூன்றாவது திருமணமும் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகிவிட்டார்.
குழந்தை பிறந்த நேரமோ மீண்டும் பிசியாக ஆரம்பித்திருக்கிறார் யுவன். சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகம் படத்துக்கு இசையமைத்து வரும் யுவன், தற்போது ஜெய், அஞ்சலி நடித்து வரும் 'பலூன்' என்ற படத்துக்கும் இசையமைக்கிறார். காதல் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கான இசை அமைப்பாளர் முடிவாகாமல் இருந்து வந்தது. இப்போதுதான் இசை அமைப்பாளர் முடிவாகிவிட்டது. 'பலூனு'க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ள தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இன்னும் பல படங்களுக்கு இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆக மீண்டும் பிஸியாக தொடங்கியிருக்கிறார் யுவன்.