ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை. 50க்கும் மேற்பட்டோர் ஒரு வருடத்துக்கு மேலாக உழைத்து உருவாக்கிய அந்தப் படத்தை பொருளாதார பிரச்னையால் கிடப்பில் போட்டுவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி. அதனால் பொருளாதார ரீதியில் சிரமத்துக்குள்ளான சீனுராமசாமிக்கு உதவும் எண்ணத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் ‛தர்மதுரை' என்ற படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.
இடம் பொருள் ஏவல் படத்தைப்போலவே இந்தப் படத்தையும் ஒரேமூச்சில் எடுத்தார் சீனுராமசாமி. விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்சேதுபதியும் தமன்னாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் இது. இப்படத்தில் தமன்னா முதன்முறையாக சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை 'ஸ்டுடியோ 9' ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ரஜினி பட டைட்டிலில் உருவாகியுள்ள படம் என்பதால் 'தர்மதுரை' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதை புரிந்து கொண்ட 'ஸ்டுடியோ 9' ஆர்.கே.சுரேஷ், தர்மதுரை படத்தை யாருக்கும் விற்காமல் தானே தமிழகம் முழுக்க சொந்தமாக வெளியிட உள்ளார்.