தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்திற்கு உலக அளவில் மிகப் பெரிய மார்க்கெட் 'கபாலி' படம் மூலம் உருவாகியுள்ளது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும், சிறிய ஊர்களில் கூட 'கபாலி' படம் திரையிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டிலும் இரு தினங்களுக்கு முன்பு 'கபாலி' படம் திரையிடப்பட்டுள்ளது. நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்காக படத்தை திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள். 'கபாலி' படத்தைப் பார்க்க தமிழ் மக்கள் மட்டுமல்லாது, மற்ற இந்திய மக்களும், நைஜீரியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டவர்களும் படத்தை ஆர்வத்துடன் வந்து ரசித்துள்ளார்கள். 6 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டதாம். படம் பார்க்க வந்தவர்களுக்கு மதிய உணவும், இரவு உணவும் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நைஜீரியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி அவருடைய மனைவி லலிதா தேவியுடன் கலந்து கொண்டு திரையிடல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். தென்னிந்திய கலாச்சார சங்கத்தினரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
“ஒரு திருவிழா போல 'கபாலி' படம் பார்த்த அனுபவத்தை அனைவரும் கொண்டாடி ரசித்தார்கள். ரஜினிக்கு வயது 65 என்று சொன்னால் யாரும் நம்பவேயில்லை. நைஜீரிய நாட்டு மக்கள் அடுத்த ரஜினி படம் வரும் போது அதை நைஜீரிய மொழியில் டப்பிங் செய்து திரையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்,” என அங்குள்ள ரஜினியின் தீவிர ரசிகரான திலீப் கூறுகிறார்.
இதற்கு முன் நைஜீரியாவில் 'தெறி, வேதாளம்' படத்தைத் திரையிட்டார்களாம். ஆனால், அவற்றிற்குக் கிடைத்த வரவேற்பை விட பல மடங்கு வரவேற்பும் கொண்டாட்டமும் 'கபாலி' படத்திற்குக் கிடைத்தது என்கிறார் அவர்.