தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இரண்டாவது மகனான இவர், வெங்கட் பிரபு இயக்கிய பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசை யமைத்து விட்டார். அதையடுத்தும் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். மேலும், இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட யுவனின் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்தில் முடிந்தது. அதையடுத்து 2014-ல் முஸ்லீம் மதத்துக்கு மாறிய யுவன் ஷங்கர் ராஜா, ஜாப்ரூன் நிஷா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர் மதம் மாறியதால் அவரது தந்தையான இளையராஜாவுக்கும், அவருக்குமிடையே குடும்பத்தில் மோதல் வெடித்தது. என்றாலும், அது நீடிக்க வில்லை. கடந்த ஏப்ரல் மாதம் யுவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதை யடுத்து பேத்தியை பார்ப்பதற்காக சென்றார் இளையராஜா. இந்நிலையில், நேற்று யுவனின் மகளுக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் யுவன் மகளுக்கு ஷியா யுவன் -என்று பெயர் வைத்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பேத்தி ஷியா யுவனை வாங்கி நீண்ட நேரம் கொஞ்சி மகிழ்ந்தாராம்.