மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். இவரும் இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் நல்ல நண்பர்கள்.ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாக தெரிகிறது.சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே படங்களுக்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற போவதாக செய்திகள் வெளியாகின.அதுவும் தமிழில் விஜய் நடித்து வெற்றியடைந்த தெறி படத்தை ரீ-மேக் என்றும் கூறப்பட்டது. ஆனால் தில்வாலே படம் கடந்த வருடம் தீபாவளிக்கு , சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாஜிராவ் மஸ்தானி படத்துடன் வெளியாகி தோல்வியை தழுவியது. இது ஷாருக்கை மிகவும் கவலையடைய செய்தது. இதனால் தற்போது இருவரிடையே கருத்து வேறுபாடு எற்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.