பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
லண்டனில் இருந்து இந்தியா வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அசத்தி வருபவர் எமி ஜாக்சன். பல நடிகைகளை போல் எமிக்கும் ஹிந்தி பேச கொஞ்சம் சிரமமாக இருக்கிறதாம். எமி ஜாக்சன் தற்போது இயக்குநர் சோஹைல் கான் இயக்கும் படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .இப்படத்திற்காக எமி ஜாக்சன் உருது மற்றும் ஹிந்தி மொழிகள் பேசி நடிக்கிறார்.சோஹைல்கான் இயக்கவிருக்கும் இப்படம் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் உருவாக இருக்கிறது.இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.படத்தின் சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. எமி ஜாக்சன் தற்போது படமாக்கபட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். உதவியாளர் ஒருவரின் துணையோடு எமி, உருது மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் பேசி வருகிறார்.