தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாகார்ஜூனா-அமலா தம்பதியரின் மகன் அகில் இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்படம் தோல்வியை தழுவியது. முதல் படத்தின் தோல்வியின் காரணமாக இரண்டாவது படத்திற்கு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட அகில் மற்றும் நாகார்ஜுனா இறுதியாக இயக்குனர் ஹனு ரவிபுடி கூறிய கதை பிடித்துப்போக அப்படத்தை முடிவு செய்துள்ளனர். அகிலின் அடுத்த படத்தை நாகார்ஜுனாவின் தனது அன்னபூர்னா ஸ்டுடியோஸ் மற்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தை நாகார்ஜூனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ல் துவங்க படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. தற்போது இயக்குனர் ஹனு அகிலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகியைத் தேடி வருகின்றாராம்.