டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கபாலி படம் வெளியாவதற்கு முன்பிருந்ததை விட வெளியான பின்தான் செய்திகளில் அதிகமாக அடிபட்டு வருகிறது. படத்தின் முதல் காட்சிக்குப் பிறகே பலரும் பலவிதமான எதிர்ப்பான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். வெளியீட்டுக்கு முதல் நாள் வரை கபாலிடா....நெருப்புடா... என்று கூவிக் கொண்டிருந்தவர்கள் கூட படம் பார்த்தபின் மாற்றி பேச ஆரம்பித்தார்கள். ஆனால், ரசிகர்கள் யாரும் அப்படிப் பேசவில்லை. சமூக வலைத்தளங்களில் எங்கே தங்களது அபிமான நடிகர்களின் வசூலை ரஜினிகாந்த் முறியடிக்க முடியாத அளவிற்கு கொண்டு போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் தங்களை அடுத்த சூப்பர் ஸ்டாராக நினைத்துக் கொண்டிருக்கும் சில நடிகர்களின் ரசிகர்கள் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள், அதற்கு முன்னதாக பிரிமீயர் காட்சிகள் என மொத்தமாக வசூல் என்ன என்று பார்த்தால் அது 300 கோடியைக் கூடத் தொடலாம் என பாலிவுட்டில் உள்ள பல பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஹிந்தித் திரையுலகில் உள்ள பலருக்கும் கபாலி படத்தின் வசூல் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஒரு பக்கம் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்க எப்படி கபாலி படம் வசூலை அள்ளுகிறது என அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தங்களது எரிச்சலையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஹிந்தியில் தூம் 3 படம்தான் வெளிநாடுகளில் முதல் வார முடிவில் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது. அந்தப் படம் முதல் வார முடிவில் வெளிநாடுகளில் சுமார் 70 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருந்தது. தற்போது கபாலி படம் 87 கோடி ரூபாய் வரை வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளது என்கிறார்கள்.
பாலிவுட்டின் மிகப் பெரும் வசூல் படங்களான தூம் 3, சுல்தான், தில்வாலே, பஜ்ரங்கி பைஜான் ஆகிய படங்கள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியாகின. ஆனால், கபாலி படம் ஒரு சாதாரண நாளில் வெளியாக இவ்வளவு வசூலைப் பெற்றுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதே போல, தென்னிந்திய மொழிப் படங்களில் கடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படம் புரிந்த சாதனைகளையும் கபாலி படம் தகர்த்துள்ளது. இந்த வாரமும் கபாலி படம் அதே வரவேற்புடன் ஓடினால் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்கிறார்கள்.
ஹிந்தித் திரையுலகமும், தெலுங்குத் திரையுலகமும் ஒரு தமிழ்ப் படம் புரிந்த சாதனையைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்குள்ள சிலரோ அதைக் கொண்டாடாமல் கபாலி படத்தில் உள்ள நண்டு கதையைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார்.