‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
வழக்கமான கதாநாயகியாக பல படங்களில் நடித்தபோதும், பேராண்மை, பரதேசி, கபாலி போன்ற படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் தன்ஷிகா. அதிலும் கபாலி படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சண்டை காட்சியில் ஹாலிவுட் பட ஹீரோயினிகள் அளவுக்கு அவர் நடித்திருப்பது கோலிவுட் இயக்குனர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. தன்ஷிகாவா இப்படி என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் ரஜினி படத்திலேயே முக்கித்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கும் தன்ஷிகாவிடம் தற்போது சில டைரக்டர்கள் ஆக்சன் கதைகளை சொல்லி வருகிறார்கள். அதனால் அடுத்தபடியாக தன்ஷிகாவின் சினிமா பயணம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே கைவசம் காலக்கூத்து, காத்தாடி, கிட்ணா உள்பட சில படங்களை வைத்திருக்கும் தன்ஷிகா, கபாலியில் நடித்திருப்பதைப்பார்த்து விட்டு ஏராளமான ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்தியும் வருகிறார்கள். இதனால் இதுவரையில்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் தன்ஷிகா.