இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் நடன புயல் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வருகின்றார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருக்கும் ஜனதா கேரேஜ் செப்டம்பர் 2ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பின்னர் கதையாசிரியர் இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ளார். தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வெற்றி கண்ட கல்யான் ராம் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ஐஎஸ்எம் படத்தில் ஊடகவியலாளராக நடிக்கின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜூனியர் என்.டி.ஆர் கல்யாண் ராமுடன் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் ஐஎஸ்எம் ஆகும்.