சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான 'பூலோகம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ். போலீஸ் ஸ்டோரி, டும் சன்ரைஸ், பியர்லஸ், சார்லீஸ் பர்ம் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.
தற்போது நாதன் ஜோன்ஸ் 'ஏ பிளையிங் ஜாட்' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் டைகர் ஜெராப்புக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தை நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்குகிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ கதை. அதில் சூப்பர் பவர் வில்லனாக நடித்துள்ளார் நாதன் ஜோன்ஸ். ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ஹீரோயின். விஜய்குமார் அரோரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் ஜிகார் இசை அமைத்துள்ளார். பாலாஜி மோகன் மோசன் பிக்சர்ஸ் சார்பில் ஏக்தா கபூர், சந்தோஷ் கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் 25ந் தேதி வெளிவருகிறது.
“பூலோகம் படத்தில் நடித்தபோது நிறைய இந்தி பட கதைகள் வந்தது. அதெல்லாம் சுத்த சொதப்பல் கதைகள். என் உடம்மை மட்டுமே காட்டி நடிக்க கூடியதாக இருந்தது அப்படி நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. இந்தப் படம்தான் எனக்கு பிடித்திருந்தது அதனால் நடிக்கிறேன். நல்ல கதையுடன் கூடிய படமாக இருந்தால்தான் இந்திய படத்தில் நடிப்பேன்” என்கிறார் நாதன் ஜோன்ஸ்.