டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கபாலி' படம் கடந்த ஒரு வாரமாக அனைவரது காதுகளையும் அடைத்துக் கொண்டிருந்ததால் மற்ற எந்தப் படங்களைப் பற்றிய பேச்சுக்களும் யாருடைய காதுகளிலும் விழாமல் போய்விட்டது. இன்றுதான் ஒவ்வொருவராக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்னென்ன படங்கள் வெளிவரும் என்பதையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து நடைபெற உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
'கபாலி' டீசர் வந்ததிலிருந்தே அந்த டீசரைத் தவிர்த்து வேறு எந்த டீசர் வெளிவந்தாலும் கூட அவற்றைப் பற்றிய பேச்சுக்கள் எடுபடாமலே போய் இருந்தன. எப்படியும் இந்த வருடத்தின் மத்தியில் 'கபாலி' படம் வெளிவந்ததால் இந்த வருடத்தை 'கபாலிக்குப் பின் கபாலிக்கு முன்' என விவாதம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 20007ம் வருடத்திலேயே இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதற்குப் பிறகுதான் குறும்படங்கள் மூலம் பட இயக்குனர்களாக அறிமுகமானவர்களுக்கும் வாசல்கள் திறந்தது. அதை சென்னை 28 குழுவினர் 2007-லேயே ஆரம்பித்து வைத்தனர்.
இப்போது 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் மூலம் அடுத்த திருப்புமுனையை வெங்கட் பிரபு ஏற்படுத்துவாரா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இந்தப் படத்திற்கான டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.