‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விக்ரம் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் தெய்வத்திருமகள். அந்த படத்தில் அனுஷ்கா, அமலாபால் இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். அந்த படத்தை இயக்கி வந்த நேரத்தில் டைரக்டர் விஜய், அமலாபாலுக்கிடையே காதல் உருவானது. அதையடுத்து விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலாபால் நாயகியாக நடித்தார். இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் ஏ.எல்.விஜய்-அமலாபால் ஆகிய இருவரும் 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனபோதும், அதையடுத்தும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார் அமலாபால்.
அதோடு பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ள சிலசமயங்களில என்ற படத்தை பிரபுதேவா ஸ்டுடியோசுடன் இணைந்து ஏ.எல்.விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோ சார்பில் அமலாபால்தான் அந்த படத்தை தயாரித்து வருகிறார். அதனால் அவர் நடிப்பு, தயாரிப்பு வேலைகள் என பிசியாக இயங்கிக்கொண்டி ருக்கிறார். அதேபோல் ஏ.எல்.விஜய்யும் தான் இயக்கும் படவேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், டைரக்டர் ஏ.எல்.விஜய்-அமலாபாலுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களாக மீடியாக்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனபோதும், அந்த செய்தி சம்பந்தமாக டைரக்டர் விஜய், அமலாபால் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.