தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
காதல் கதைகளாக நடித்து வந்த தனுஷ் அவ்வப்போது ஆக்சன் கதைகளிலும் நடித்தார். சமீபகாலமாக அவரது கவனம் சமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால் காதல் ட்ராக்கை குறைத்து அழுத்தமான சமூக அவலங்களை எடுக்கும் கதைகளாக தற்போது அவர் கேட்டு வாங்கி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை போன்றவை தனுஷை முழுமையாக மாற்றிக்காட்டும் படங்களாக உருவாகி வருகின்றன.
மேலும், கோலிவுட்டில் சரிந்த தனது மார்க்கெட் தற்போது சீர்படுத்தி விட்ட தனுஷ், இந்தியிலும் ராஞ்ஜனா, ஷமிதாப் போன்ற படங்களில் நடித்தார். இதில் ராஞ்சனா 100 கோடி வசூல் நாயகன் பட்டியலில் அவரை சேர்த்தது. ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் நடித்து அவரிடமும் பாராட்டு பெற்றார். இந்நிலையில், மீண்டும் ஒரு இந்தி படத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக இப்போது ஒரு புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு, மணிரத்னம் இயக்கத்தில் பிரபு-கார்த்தி ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக நடித்த படம் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் விஜயகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அமலா, நிரோஷா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்ற அப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக தனுஷ் நடிக்கிறாராம். அந்த படத்தை தமிழில் விக்ரம்-ஜீவா நடிப்பில் வெளியான டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் இயக்குகிறாராம்