இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கல்யாண் ராம் நடிப்பில் பட்டாஸ், சாய் தரண் தேஜ் நடிப்பில் சுப்ரீம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ராம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராம் இப்படத்தில் பார்வையற்றவராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்வையற்றவராக நடிப்பதற்காக ராம் பயிற்சி எடுக்க துவங்கியுள்ளாராம். மேலும் பார்வையற்றவர்களை சந்தித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி வரும் ராம் அப்போது தான் அவர்களது பழக்கவழக்கங்களையும் வாழ்வியலையும் எளிதில் உணர முடியும் என்றும் கூறியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ராம் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.