ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எமி ஜாக்சன் ஒரு ஆச்சர்யமான நடிகை. அக்மார்க் ஆங்கில பொண்ணு இந்திய படங்களில் இந்திய பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாகவும்கூட நடித்து சாதனை படைத்து வருகிறார். கருங்கூந்தலும் இந்திய ஜாடை கொண்ட முகமும் அவருக்கு சாதகமாக இருக்கிறது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.ஓ', படத்திலும் இந்தியில் சோஹெல்கான் இயக்கத்தில் 'அலி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சொந்த நாடான இங்கிலாந்தில் சொந்த மொழியான ஆங்கிலத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இந்தி, தமிழ் இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். '2.ஓ' படத்தை தமிழ் படம் என்றோ, இந்திய படம் என்றோ குறைத்து மதிப்பிட முடியாது அது உலக படம். ஹாலிவுட்டை விஞ்சும் படம். அதில் நடிப்பது எனக்கு வாழ்நாள் பெருமை. அடுத்து நீண்ட நாளைய எனது கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. இரண்டு பிரிட்டீஷ் படங்களில் நடிக்கிறேன். இவை ஹாலிவுட் படம் போன்ற பிரமாண்ட படங்கள் இல்லை. பிரிட்டீஷ் மக்களின் வாழ்க்கையை பேசுகிற படங்கள் என்கிறார் எமி.