ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியின் கபாலி படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அடுத்தபடியாக விஜய்யின் 60-வது படத்துக்கும் இசையமைத்து வருகிறார். அதோடு தான் இசையமைக்கும் படங்களில் வித்தியாசமான குரல்களை தேடிப்பிடித்து பாட வைத்து வரும் சந்தோஷ்நாராயணன், படங்களில் ஹிட்டுக்காக டியூனுக்கு பொருந்தாத குரல்களை பாட வைப்பதில்லை. குறிப்பாக, ஹீரோக்களை தனது இசையில் பாட வைக்க வேண்டும் என்று அவர் ரிஸ்க் எடுப்பதுமில்லை.
ஆனால், பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தில் விஜய்யின் குரலுக்கேற்ற ஒரு டியூன் கிடைத்துள்ளதாம். மெலோடி கலந்த அந்த டியூனுக்கான பாடலும் எழுதப்பட்டு விட்டதாம். அதனால் அடுத்தபடியாக விஜய் பட டீம் ஐரோப்பாவிற்கு செல்லவிருக்கும் நிலையில், முன்னதாக அந்த பாடலை பாடுகிறாராம் விஜய். ஐரோப்பாவிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய லொகேசனில் அந்த டூயட் பாடலில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ரொமான்ஸ் செய்யப்போகிறார்களாம். பெரும்பாலும் விஜய் பாடும் எல்லா பாடல்களுமே ஹிட்டாகி வரும் நிலையில், இந்த பாடலை சூப்பர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெடுகிறாராம் சந்தோஷ் நாராயணன்.