ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏதாவது புதுசாக செய்து மக்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்று சினிமாவில் கன்னாபின்னாவென்று ஏதாவது செய்கிறார்கள். அதில் முக்கியமானது தலைப்பு வைப்பது. 'நீங்க நல்லா கடலை போடுவீங்களா' என்று தலைப்புடன் ஒரு படம் தயாராக இருக்கிறது. இதனை உதயம் எண்டர்மெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சகாய சுரேஷ் என்பவர் இயக்குகிறார். ராகவ் இசை அமைக்கிறார் சாம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' என்ற தலைப்பை நாங்கள் 3 வருடத்துக்கு முன்பே பதிவு செய்து வைத்து விட்டு இப்போது படம் எடுத்துக் கொண்டிருக்கிறாம். எங்கள் தலைப்பில் சிறிய மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று ஆர்.ஜி மீடியா என்ற நிறுவனத்தின் சார்பில் படத்தின் இயக்குனர் ஆனந்தராஜ் என்பவர் தயாரிப்பாளர் கில்டில் புகார் அளித்துள்ளார். “இரு தலைப்புகுகம் சம்பந்தம் இல்லையென்றாலும் இவர்கள் தலைப்பின் சாயலில் அந்த தலைப்பு இருக்கிறதாம். அப்படி என்னதான் இந்த தலைப்பில் சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறான்” ரசிகன்.