பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ரஜினி படம் வெளியாகும் தினத்தை தீபாவளியாக.. பொங்கலாக எண்ணி கொண்டாடுவது ஏழை எளிய அடித்தட்டு மக்கள்தான். ரிக்ஷா ஓட்டிகள், ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள் போன்ற, சமான்ய ரசிகர்கள்தான் அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் ரஜினிக்கு கட்அவுட் வைத்தும், கொடி தோரணங்கள் கட்டியும் ரஜினி படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளை கோலகலமான இடங்களாக மாற்றுகின்றனர்.
கபாலி படத்துக்கும் இப்படித்தான் பல ரசிகர்கள் கபாலி திரையிடப்பட்ட திரையரங்குகளை அலங்கரித்திருந்தனர். அப்பேற்பட்ட ரசிகனுக்கு கபாலி படத்தை பார்க்கும் வாய்ப்பு இப்போது மறுக்கப்பட்டிருக்கிறது. கபாலி படத்தை வாங்கிய விநியோக நிறுவனங்களான ஜாஸ் சினிமாஸ், மற்றும் ஏ.ஜி.எஸ். ஆகிய இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் முதல் மூன்று நாட்களில் கபாலி படத்தை ரஜினி ரசிகன் பார்க்க முடியாதபடி செய்துவிட்டன. அதாவது, இன்போசிஸ், காக்னிசென்ட், ஏர்டெல் போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒவ்வொரு காட்சியையும் மொத்தமாக விற்றுவிட்டனர். இதனால் கபாலி படத்தை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
சென்னையில் உள்ள ஏறக்குறைய எல்லா தியேட்டர்களிலும் இதுதான் நிலைமை. அனைத்துக்காட்சிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துவிட்டதை அறிந்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். காசி தியேட்டரில் நேற்று அதிகாலை முதல் காட்சி கபாலி படம் பார்க்கக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. மொத்த டிக்கெட்டையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டதாக சொல்லப்பட்டதைக் கேட்டதும் கடுப்பாகிவிட்டனர் ரஜினி ரசிகர்கள். நாங்கள் கஷ்டப்பட்டு கொடி தோரணம் கட்டுவோம். டிக்கெட்டை கார்ப்பரேட் காம்பெனிக்கு விக்கிறீங்களா? என்று ஆவேசமடைந்த ரஜினி ரசிகர்கள் காசி தியேட்டரில் வைத்திருந்த பேனர்களை எல்லாம் அவிழ்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.